Wednesday, September 3, 2014

நோய் தீர்க்கும் சுண்டைக்காய்யின் மகத்துவம் / Health Benefits of Turkey Berry (Chundaikkai)

நோய் தீர்க்கும் சுண்டைக்காய்யின் மகத்துவம்




சிலரே டேய் சுண்டைக்காய் என்று திட்டி தீர்ப்போம். உண்மையில் நாம் உணவுக்குப்  பயன்படும் சுண்டைக்கையின் மகத்துவத்தை திட்டும் பெரும்பலோர் அறிந்துருக்கமாட்டார்கள்.

சுண்டைக்காய் உணவுப் பொருளாக பயன்படும் மருந்து என்று சொல்லலாம். இதில் ஏராளமான மருத்துவ விஷயங்கள் இருக்கிறது. மலை காடுகளில் தானாக வளருவது மலைச் சுண்டைக்காய் என்றும், வீட்டு கொல்லைப் புறத்தில்  நாம் பராமரித்து வளர்ப்பது நாட்டு சுண்டைக்காய் என்றும் அழைக்கபடுகிறது. இதைத் தான் நாம் பெரும்பாலும் சமையலில் உபயோகிக்றோம். இது உடலுக்கு நல்ல ஊட்டத்தை தந்து எப்பவும் நம்மை சுறுசுறுப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைக்கிற குணம் சுண்டைகாய்க்காய்க்கு உண்டு.

சமையலில் சுண்டைக்காய் :

சுண்டைக்காய்யை  வைத்து சட்டியில் எண்ணெய் ஊத்தி ஊளுந்து, கருவேப்பில்லை, வரமிளகாய் போட்டு தாளித்து வறுத்த சுண்டைக்காய் போட்டு புளி, உப்பு சேர்த்து தொக்கு செய்யலாம். பயத்தம்பருப்புடன் சேர்த்து இதை கூட்டு செய்தும் சுவைக்கலாம். முத்திய சுண்டைக்காய்யை சிறுது நசுக்கி மோரில் ஊற வைத்து, வெயிலில் காயவைத்து பின்னர் மோரில் உறைய வைத்து காய்ந்ததும் பத்திரப்படுத்தி வைத்து தேவைப்படும் பொழுது எண்ணைய்யில் வறுத்து சுடான சாதத்துடன் தொட்டுக் கொள்ளலாம். இப்போது கடைகளில் உப்பு சேர்த்து அல்லது சேர்க்காத சுண்டவத்தல் கிடைக்கிறது. சுண்டைக்காய் சோர்வைப் போக்கும், ரத்தத்தைச் சுத்தமாக்கும்.

சுண்டைக்காய்யில் உள்ள மருத்துவக் குணங்கள் :

1. வயித்துக் கோளாறுகளைச் சரி செய்வதில் கில்லாடி சுண்டைக்காய். இதை வாரத்திற்கு இரண்டுமுறை உண்டு வர வயித்தில் உள்ள கிருமிகள் சரியாகிவிடும்.

2. அஜீரணம், குடல் புண், குடல் கசடுகள் நீக்கிவிடும், வயித்தின் உட்புறம் பலமாவதற்கு சுண்டைக்காய் சிறந்தது.

3. கை, கால் நடுக்கம், சோர்வு போன்றவற்றை சரியக்கிவிடும்.

4. மூச்சுவிட முடியாமல் அவஸ்தைப்படுகிறவர்கள் சுண்டைக்காயை உணவில் சேர்க்கலாம்.


No comments: