அசைவ உணவை உண்ண விரும்பின நான் அடுத்து தேர்ந்தெடுத்த இடம் பரபரப்பான மதுரை டவுன்ஹால் ரோட்டுல்ல மண்டையன் ஆசாரி சந்துல இருக்கிற சாரதா மெஸ்ஸ . இங்க அசைவ உணவுகள நம்ம வீட்டு சுவைல செய்வாங்கன்னு கேள்விப்பட்டேன். ஹோடேல்ன்ன நம்ம மூணு நேரம் சாப்பாடு கிடைக்கும் என்பது தான் வழக்கம்.ஆனா இங்க புதுமை என்னன்னா சாரதா மெஸ் மதியம் மட்டும் தான் திறந்து இருக்கு அதுவும் பிரியாணி, சாதம் கூட அசைவ உணவுகள மதிய நேரத்துல பரிமாறுறாங்க.
ஐம்பது வருஷம் பழைமையான சாரதா மெஸ்ல மதுரைக்கு பெயர் போன அயிரை மீன் குழம்பு, வீரால் மீன் குழம்பு, சுக்கா, கோல உருண்டை, மட்டன் குழம்பு இங்க படு பிரபலம்.அப்படியே மெனு கார்டு பாத்துட்டு எந்த வகை உணவுகள்ள சாப்பிடலாம்னு இருந்த எனக்கு சாரதா மெஸ்ஸ நிர்வாகிச்சுட்டு இருக்கிற தனசேகர், அம்சராஜன் எனக்கு உதவுனாங்க. ஆர்டர் பண்ணின உணவுகள் வரத்துக்குள்ள தனசேகர், அம்சராஜன் சாரதா மெஸ் பத்தின சுவராஸ்ஸயமான விஷயங்களை பகிர்ந்துகிட்டாங்க. சாரதா மெஸ் ஓட ஸ்பெஷல் அயிரை மீன் குழம்பு தான். சாரதா மெஸ் ஆரம்பிச்சதே தற்செயலா நடந்த ஒன்னு, சாரதா மெஸ்ஸ தொடங்கின்ன திரு.லிங்கம் அவங்களோட மனைவி வைக்கிற அயிரை மீன் குழம்ப பிரதானபடுத்தி ஆரம்பிச்ச கடை தான் இந்த சாரதா மெஸ். ஆரம்ப காலத்துல இந்த கடைய மண் பணை சமையல் கடைன்னு சொல்லுவாங்க, பின்ன காலபோக்கிலா மாறிடுச்சு. எங்களுக்கான வாடிக்கையாளர்கள் நிறைய இருக்காங்க, மதியம் 11.30 மணில இருந்து மாலை 4.30 மணி வரை சாதம், பிரியாணி கூட அசைவ உணவு வகைகளை பரிமாறுறோம். சாதத்தோட கூட்டு, பொரியல், சம்பார், ரசம் எல்லாம் வைக்கிறோம்.
அயிரை, சீலா, வீரால், கெளுத்தி மீன் வகைகளை தான் எங்க கடைகளில் பிரதான மீன் குழம்பு வகைகளுக்கு பயன்படுத்துறோம். எங்களுடைய சமையல் எல்லாமே எங்க அம்மா கைப்பக்குவதுல ரெடி ஆன ரெசிப்பிங்கிறதலா இன்னும் நாங்க வீட்டு சாப்பாட்டுக்கு உண்டான சுவையே கொடுத்துட்டு இருக்குறோம். அது போல சமையல்லா சேர்க்கிற மசாலாதூள்கள் அனைத்தும் நாங்களை தயார் பண்றதால எங்களுக்கான சுவையே இன்னைக்கும் நாங்க தக்கவச்சுட்டு இருக்கோம். இப்பம் நீங்க எங்க சாப்பாட சாப்பிட்டுட்டு சுவை எப்படின்னு சொல்லுவிங்க பாருங்கன்னு சொன்னாரு அம்சராஜன்.
வாழை இலைல சாதம் அது கூட கோழி சுக்கா கறி, மட்டன் கறி குழம்பு, அயிரை மீன் குழம்பு, வீரால் மீன் குழம்பு இது எல்லாம் போதாதுன்னு இரண்டு கோல உருண்டை வேற வச்சாங்க. குழம்புல மிளகு,மல்லியோட சுவை மற்றும் மணம் நன்றாக தெரிஞ்சது. இது வீட்டுல தயாரிச்ச மசாலா என்கிறதுக்கு சாட்சி. மீன் குழம்புல தேங்காய் அரைச்சு சேர்க்கமா தேங்காய் பால் ஊத்தி செய்யறதால வண்ணம், சுவை நன்றாக இருக்கு. கம்மா, குளத்து மீன்களுக்கு உண்டான மணல் வாசனை குழம்புல இருந்தது. இங்க இன்னமும் விறகு அடுப்பு பயன்படுத்தி சமைக்கிறதல அசைவ உணவுகளின் சுவை சூப்பராக இருக்கு. சைவ சாப்பாடு 65 ரூபாய்க்கு கிடைக்குது. அசைவ விரும்பிகளுக்கு இங்கு மீன், எறால், சுக்கா, பிரியாணி, குழம்பு, சிக்கன்னு நிறைய வகைகள் இருக்கு, இது எல்லாத்தையும் 80 ருபாய்ல இருந்து 150ருபாய் குள்ள சுவைக்கலாம் என்பது கூடுதல் மகிழ்ச்சி. மட்டன் கோல உருண்டையின் விலை 10 ருபாய் தான், அதுல மசாலா பொருட்களின் சுவை நாவில் நன்றாக பட்டது. இந்த கோல உருண்டை வாயில்ல கரைய்யிற மாதிரியான உணர்வ தந்தது.
வீட்டு சாப்பாட்டு மாதிரி இருக்கிறதல உணவில சொல்லி கொள்கிற மாதிரி காரமோ, எண்ணைய்யோ அவ்வளவாக இல்லை. அசைவ உணவுனாலே கலர் பிரதானமா இருக்கும், ஆனா இங்க கிடைக்கிற பல அசைவ உணவுகளுக்கு ஆன கலர் மசாலா பொருட்கள்ள இருந்து வந்ததாகவே தெரியுது.
சூப்பரான மதிய சாப்பாட மோரு ஊத்தி சாப்பிட்டு முடிச்சுட்டு தனசேகர் அம்சராஜன் ஓட உபசரிப்புக்கு நன்றி சொல்லிட்டு சாரதா மெஸ் விட்டு கிளம்பும் போது புரிஞ்சது காலங்கள் மாறினாலும் பழமை மாறாத உணவின் சுவையும் சாரதா மெஸ்ன் தோற்றமும்.
சாரதா மெஸ் தொடர்ப்புக்கு - திரு.அம்சராஜன் - 9486506197